தர்மத்தின் கூட்டணியான நமக்கு வெற்றி நிச்சயம்: தேனி பிரச்சாரத்தில் ஓபிஎஸ்!

வருகிற நாடளுமன்றத் தேர்தலில் தர்மத்தின் கூட்டணியான அதிமுக- பாஜக கூட்டணிக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என தேனி பிரச்சார பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.
 | 

மக்களவைத் தேர்தலையொட்டி, தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் பொருட்டு, பிரதமர் மோடி இன்று தேனிக்கு வருகை தந்தார். 

நிகழ்ச்சியில் தொடக்கத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், " நாட்டில் மதக்கலவரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் பிரதமர் மோடி. மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அதிமுக- பாஜக செயல்படுகிறது. நமது தேசத்தின் காவலர் பிரதமர் மோடி. 

அதிமுக- பாஜக கூட்டணி தர்மத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணியாகும். எனவே, தர்மத்தின் கூட்டணியான நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்று பேசினார். 

தர்மத்தின் கூட்டணியான நமக்கு வெற்றி நிச்சயம்: தேனி பிரச்சாரத்தில் ஓபிஎஸ்!

மேலும், நிகழ்ச்சியில் மேடையில் பிரதமர் மோடியிடம், ஓபிஎஸ்-இன் மகனும், தேனி மக்களவை தொகுதியின் வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் மோடியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

அதைத்தொடர்ந்து மற்ற தொகுதியின் வேட்பளார்களும் மோடியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP