அதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனியில் இன்று அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், ‘தமிழ் மொழிக்கு எந்த சூழலிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது. மாற்று கட்சியினர் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்துள்ளீர்கள். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் அன்போடு பழகக்கூடிய தங்கதமிழ்ச்செல்வன் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பார். தங்கதமிழ்ச்செல்வனை ஏற்கனவே திமுகவில் தூண்டில் போட்டு இழுக்க முயற்சித்தோம். ஆனால் நடக்கவில்லை. தற்போது நடந்துவிட்டது’ என்றார்.

மேலும், ‘அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினருக்கு மதிப்பு இல்லை. திமுக முறையாக தேர்தலை சந்தித்து 200 தொகுதியில் வெற்றி பெற்று கம்பீரமாக ஆட்சியில் அமரும். முதல்வர் கூறுவது போல் மிட்டாய் தந்து வெற்றி பெறவில்லை; மக்களின் நம்பிக்கையால் வெற்றி பெறுவோம். கருணாநிதி, ஜெயலலிதாவும் முதல்வராக இருந்தவரை தமிழகத்தில் நீட் நுழையவில்லை. குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி நீட் தேர்வை எதிர்த்தார்’ என்றும் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP