சென்னை சென்ட்ரல் - டி.எம்.எஸ் மெட்ரோவில் சோதனை

சென்னை மெட்ரோவின் பேஸ்-1 வழித்தடத்தின் இறுதிக்கட்ட பகுதிகளில் ஒன்றான சென்ட்ரல் - டி.எம்.எஸ் ரூட்டை விரைவில் திறக்கவுள்ள நிலையில், மெட்ரோ ரயில்வேயின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
 | 

சென்னை மெட்ரோவின் பேஸ்-1 வழித்தட கட்டுமானம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏர்போர்ட் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலும், அண்ணா சாலையில் உள்ள டி.எம்.எஸ் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்ட்ரல் - டி.எம்.எஸ் தடத்தையும் விரைவில் திறக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று, மெட்ரோவின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் டி.எம்.எஸ்- சென்ட்ரல் தடத்தில் சோதனை நடத்தினர். 

சென்ட்ரல், அரசு எஸ்டேட், ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி ஆகிய ரயில் நிலையங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. ரயிலின் செயல்பாடுகள், ஆபத்து காலத்தில் மக்கள் தப்பி செல்ல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு பிரிவின் ஆணையர் மனோகரன் உட்பட 5 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP