பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: பாதுகாப்பு சோதனை தீவிரம்!

பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 | 

பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: பாதுகாப்பு சோதனை தீவிரம்!

பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையில் நேற்று முன்தினம் (22.8.19) நள்ளிரவு 12 மணியிலிருந்து பாதுகாப்பு சோதனைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இந்துக் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வணிகவளாகங்களிலும் (Brookfield mall) 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள்  தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP