குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தற்காலிகத் தடை

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தற்காலித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தற்காலிகத் தடை

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் இப்போது சீஸன் நடைபெற்று வருகிறது. குற்றால அருவியில் குளித்துச் செல்வதற்கென்றே இந்த பருவத்தில் தமிழகமெங்கிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்வது ஆண்டுதோறும் நிகழக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடப்பு பருவத்திலும் சீஸன் தொடங்கியதும் தினமும் ஏராளமானோர் குற்றலத்திற்கு வந்து குளித்துச் சென்றவாறு உள்ளனர். அதன் ஓர் பகுதியாக இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் இருந்தினர்.

இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவி கரை புரண்டு ஓடிய வண்ணம் உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்கு காவல்துறை தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று அங்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றதுடன் திரும்பிச்சென்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP