திருச்சி விமான நிலையத்தில் தற்காலிக தடுப்பு வேலி!

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக 4.50 லட்சம் மதிப்பில் தற்காலிக தடுப்பு வேலிகளை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விமான நிலைய இயக்குனரிடம் வழங்கினார்.
 | 

திருச்சி விமான நிலையத்தில் தற்காலிக தடுப்பு வேலி!

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக 4.50 லட்சம் மதிப்பில் தற்காலிக தடுப்பு வேலிகளை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விமான நிலைய இயக்குனரிடம் வழங்கினார்.

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் போக்குவரத்தை சீர் செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் வரும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்களை சீர்செய்து ஒழுங்குபடுத்தி போக்குவரத்து பணிகளுக்காக நிறுவனம் பங்களிப்புடன் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் 50 தற்காலிக தடுப்பு வேலிகளை மாநகர காவல்துறை சார்பில் திருச்சி விமான நிலையத்திற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 

மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தற்காலிக தடுப்பு வேலிகளை விமான நிலைய இயக்குனர் குணசேகரன் மற்றும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய விமான நிலைய இயக்குனர் குணசேகரன், "காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறையை கடைபிடிக்க வலியுறுத்தினாலும், பொதுமக்கள் நாம் அதனை கடைபிடிப்பதில்லை. குறிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும் படித்தவர்கள் கூட அதனை பின்பற்றுவதில்லை. 

திருச்சி விமான நிலையத்தில் தற்காலிக தடுப்பு வேலி!

இதனை விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புத் துறையினரும் கடைபிடிப்பதில்லை. எனவே, இனிவரும் நாட்களில் முதல் இரண்டு தடவை அணியாமல் வந்தால் அவர்களுக்கு அனுமதி அளித்தாலும், அடுத்து 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்படும்" என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

காவல் ஆணையர் அமல்ராஜ் பேசுகையில், "திருச்சி மாநகர கட்டுப்பாட்டு அறையில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருகிற வாகனங்களை கண்காணிப்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம். இதன் வாயிலாக பல்வேறு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்றச் செயல்கள் நடந்தால் கண்காணிப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும்.

திருச்சி விமான நிலையத்தில் தற்காலிக தடுப்பு வேலி!

ஒரு முறை இரு கட்சியினர் இடையே விமான நிலையத்திற்கு எதிரில் நடந்த வாக்குவாதத்தை கண்டறிந்து அவர்களை கைது செய்ய முடிந்தது, விமான நிலையத்திற்கு வரும் காவல்துறையினர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் சரி, தலைக்கவசம் இல்லாவிட்டால் அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP