கோவில் சிலை முறைகேடு: இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை முறைகேடுவழக்கில் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி இன்று சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

கோவில் சிலை முறைகேடு: இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை முறைகேடு வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி இன்று சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் சிலைகடத்தல் தொடர்பான வழக்குகளை பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தது வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ் கந்தர், ஏழுவார் குழலி சிலைகள் செய்ததில் சுமார் 8.77 கிலோ தங்கம் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது. 

இந்த வழக்கில் ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணியை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP