க்ளாஸ் ரூம்ல குடித்து கும்மாளமிடும் ஆசிரியர்கள்! வைரலாகும் வீடியோ!

வகுப்பறையில் மது அருந்திய ஆசிரியர்கள்.. வீடியோ எடுத்த மக்கள்..
 | 

க்ளாஸ் ரூம்ல குடித்து கும்மாளமிடும் ஆசிரியர்கள்! வைரலாகும் வீடியோ!

ஒரு பள்ளியின் மூன்று ஆசிரியர்கள் ஒரு வகுப்பறைக்குள் மது அருந்திய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் வீடியோவில்  ஒரு வகுப்பறைக்குள் குடிப்பதைக் காண முடிந்தது.

ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. வீடியோ கிளிப்பில் உள்ள மூன்று பேரும் ஒரு வகுப்பறைக்குள் குடித்து விட்டு விருந்து சாப்பிடுகிறாரகள். மூன்று ஆசிரியர்களும் கஜேந்திர பைதா, சத்யேந்திர சவுத்ரி மற்றும் அபய் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சில கிராமவாசிகள், வகுப்பறையின் ஜன்னலிலிருந்து செல்போனில் ஆசிரியர்கள் குடித்துக் கொண்டிருப்பதைப் படம் பிடித்தனர். இந்த வீடியோ அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP