பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!
 | 

பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. நாளை, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அதன் பிறகு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆய்வு குழுக் கூட்டம் பிற்பகலில் நடைபெறுகிறது. 

இந்த கூட்டத் தொடரில் நீட் தோ்வு விவகாரம், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முக்கிய பிரச்னைகளை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  இதனால், கூட்டத் தொடரின் அனைத்து நாட்களும் பரபரப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. நாளை தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை ( ஜனவரி 10) வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP