தமிழர்கள் பா.ரஞ்சித்தை செருப்பால் அடிக்க வேண்டும்: ஹரி நாடார் ஆவேசம்!

மாமன்னர் ராஜராஜ சோழனைப் பற்றி அவதூறாக பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேரில் பார்க்கும் உண்மையான தமிழர்கள் செருப்பால் அடிக்க வேண்டும் என பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழர்கள் பா.ரஞ்சித்தை செருப்பால் அடிக்க வேண்டும்: ஹரி நாடார் ஆவேசம்!

மாமன்னர் ராஜராஜ சோழனைப் பற்றி அவதூறாக பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேரில் பார்க்கும் உண்மையான தமிழர்கள், அவரை செருப்பால் அடிக்க வேண்டும் என பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த கல்வியாண்டின் 7ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் பக்கம் எண்.59ல் முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறினார்.

மேலும், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோரை சந்தித்து இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளதாகவும், அந்த பகுதியை உடனடியாக நீக்க அவர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். மேலும், அந்த பகுதியை நீக்க பள்ளிக்கல்வித்துறை காலம் தாழ்த்தினால் இதைக் கண்டித்து நாடார் சமூகத்தினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழனை குறித்து அவதூறாக பேசியதை நாடார் சமூகம் வன்மையாக கண்டிப்பதாகவும், இது சாதிய மோதல்களை உருவாக்க முக்கிய காரணமாக அமையும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அவரை நேரில் பார்ப்பவர்கள் உண்மையான தமிழனாக இருந்தால் மாமன்னர் ராஜ ராஜ சோழனை அவதூறாக பேசிய பா.ரஞ்சித்தை செருப்பால் அடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP