குரூப் -2 தேர்வில் சாதித்து காட்டிய தமிழக மாணவி!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 2 தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷினிக்கு உறவினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 | 

தொழில் கூட்டுறவு அதிகாரி, தொழில் உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையர், வேலைவாய்ப்புத் துறை இளநிலை அதிகாரி உள்ளிட்ட 23 துறைகளில் 1,338 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2  தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி நடந்து முடிந்தது. லட்சக்கணக்கானோர் இந்த தேர்வினை எழுதினர். இரண்டாம் கட்ட தேர்வு மற்றும் நேர்காணல் முடிவடைந்த நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்ற மாணவி 340க்கு 210 புள்ளி 5 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP