அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் தமிழிசை!

10% இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்கிறார்.
 | 

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் தமிழிசை!

10% இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்கிறார். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்ற போது, திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஆலோசிக்க வேண்டும் என கூறினார். 

இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை 5.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP