நாட்டிலேயே உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது: சேலத்தில் முதல்வர் பேச்சு!

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ.24 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
 | 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, பெரியாம்பட்டி - துட்டம்பட்டி வரை 3 கிமீ நீளமுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்து பேசினார். 

அப்போது அவர், "இந்திய அளவில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளன. நாட்டிலேயே உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தொழில் சிறக்கவும் சாலை மேம்பாடு மிகவும் முக்கியம். 

தமிழகத்தில் குடிமராத்துப்பணிகள் விவசாயிகளின் உதவியுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மக்கள் மனமுவந்து இடம் தந்ததால் தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும்.

சாலை உள்கட்டமைப்பு வசதி சிறந்ததாக இருக்கும் மாநிலத்தில் தான் அனைத்து வசதிகளும் மேம்படும். 

தளசம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, மேச்சேரி பகுதிகளில் புதிய மேம்பாமல் அமைக்கப்படும். சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை திறக்கப்படும்.

சென்னைக்கு அருகே ரூ.2000 கோடியில் உணவுப்பூங்கா அமைக்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP