தற்கொலைகளைத் தடுக்க தமிழக அரசின் சிறப்புத் திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

தற்கொலைகளைத் தடுக்க தமிழக அரசின் சிறப்புத் திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் தலை சிறந்த மாநிலமாக இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் தற்கொலை சம்பவங்களை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்த உள்ளது. முக்கியமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான திட்டம் குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP