தென்னை மரங்களுக்கு இழப்பீடு தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

'கஜா' புயலால் சரிவடைந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 | 

தென்னை மரங்களுக்கு இழப்பீடு தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

'கஜா' புயலால் சரிவடைந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடாக வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது..

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும் போது, தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கியது போல்,  'கஜா' புயலால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளன.

இது தொடர்பாக, மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

தென்னை மரங்களுக்கு இழப்பீடு தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதில், "'கஜா' புயலால் பாதிப்படைந்துள்ள தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல் மாவட்டங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே 'கஜா' புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும்.

அதேபோல் புயலில் காயமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயையும், ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 50 ஆயிரம், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம், வாழைக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம், படகு, வலைகளை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் என இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP