மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது. கர்நாடக அரசின் அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
 | 

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக இன்று தி.மு.க சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், மேகதாது அணை கட்ட அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக திமுக தனது தோழமை கட்சிகளுடன் டிசம்பர் 4ம் தேதி போராட்டம் நடத்த இருக்கிறது. 

இந்த சூழ்நிலையில், கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நாளை மனுத்தாக்கல் செய்யவுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP