சுஷ்மாவின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு: முதலமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

சுஷ்மாவின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு: முதலமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த் சுஷ்மா மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல நாட்டுக்கே  பேரிழப்பு என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும், கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களிடமும் நல்லிணக்கத்தோடு பழகிய பண்பாளர் என்றும், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க பாடுபட்டவர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், சுஷ்மா மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்ததாக கூறியுள்ளார்.  

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP