சுர்ஜித் மரணம்: விசாரணைக்குழு அமைப்பு!

குழந்தை சுர்ஜித்தின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

சுர்ஜித் மரணம்: விசாரணைக்குழு அமைப்பு!

குழந்தை சுர்ஜித்தின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2வயது குழந்தை சுர்ஜித் கடந்த 25ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். குழந்தையை மீட்க சுமார் 80 மணி நேரம் தீயணைப்பு படையினர், மாநில, தேசிய மீட்பு படையினர் மற்றும் பலர் போராடி வந்தனர். இந்நிலையில், சிறுவன் சுர்ஜித் நேற்று அதிகாலை 4 மணியளவில் இறந்த நிலையில் மீட்கப்பட்டான். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர்  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால் சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில், குழந்தை சுர்ஜித் மரணத்தை சந்தேக மரணமாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை மணப்பாறை காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான விசாரணைக்குழு விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP