சுர்ஜித் இனி கடவுளின் குழந்தை: அமைச்சர் விஜயபபாஸ்கர்

சுர்ஜித் இனி நீ கடவுளின் குழந்தை என சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
 | 

சுர்ஜித் இனி கடவுளின் குழந்தை: அமைச்சர் விஜயபபாஸ்கர்

சுர்ஜித் இனி நீ கடவுளின் குழந்தை என சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித் பல்வேறு தொடர் போராட்டங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுர்ஜித் உயிரிழப்பு குறித்து சி.விஜயபாஸ்கர் வருத்தத்துடன் கருத்து பகிர்ந்துள்ளார். அதில், மனதை தேற்றிகொள்கிறேன். ஏனென்றால் நீ இனி கடவுளின் குழந்தை. கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறுமென எண்ணவில்லை. எப்படியும் வந்துவிவிடுவாய் என்றுதானே ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை. நான் மட்டுமல்ல இந்த உலகமே பிள்ளையாய் நினைத்த சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது. மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன் என உருக்கமாக கூறியுள்ளார். 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP