8 வழிச்சாலை திட்டம் மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்குமாறு மத்திய அரசு விடுத்துள்ள கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 | 

8 வழிச்சாலை திட்டம் மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க முடியாது என்று மத்திய அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்க மத்திய அரசு திட்டம் கொண்டு வந்தது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு அப்பகுதி மக்களில் ஓரு சாரர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ம் தேதி இத்திட்டம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் தடை விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க உயர்நீதிமன்றம் விதித்த தடையை விலக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க முடியாது என்று நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான விடுமுறை கால அமர்வு தெரிவித்துள்ளது.

.இது தொடர்பாக தமிழக தலைமை செயலர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

newstm.in

8 வழிச்சாலை திட்டம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP