கொடநாடு வழக்கு: மனோஜ், சயானை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை!

கொடநாடு கொலை வழக்கில் ஜாமீனை ரத்து செய்த உதகை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனோஜ் மற்றும் சயான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், இருவரையும் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 | 

கொடநாடு வழக்கு: மனோஜ், சயானை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை!

கொடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜ் மற்றும் சயானை வருகிற பிப்ரவரி 25ம் தேதி வரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால்  அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  காவல்துறை மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று ஜாமினை ரத்து செய்துபிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், உதகை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனோஜ் மற்றும் சயான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்கள் இருவரையும் வரும் திங்கட்கிழமை(பிப்.25) வரை கைது செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP