உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து தீர்ப்பை வழங்கியது.
 | 

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தலாம் என்றும்,  9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த 9 மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வார்டு வரையறைகளை முடித்த பின் 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP