Logo

ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
 | 

ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொதுமக்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களின் எதிரொலியாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.

இதையடுத்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், "ஸ்டெர்லைட் ஆளை மூடப்பட்டதால் நாட்டிற்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் ஆலையை இயக்குகிறோம். ஆலையில் நிர்வாக பணிகள் தேங்கிக்கிடக்கின்றன. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், வரி செலுத்துதல் உள்ளிட்ட வேலைகள் முடிக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்!

இந்த வழக்கை விசாரணை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், முழுவதுமாக  ஆலையை இயக்க அனுமதிக்க முடியாது. வேண்டுமென்றால் நிர்வாக பணிகளை முடிக்க அனுமதி தருகிறோம்" என்று கூறி நிர்வாகப்பணிகளை மட்டும் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. 

இதைத்தொடர்ந்து தீர்ப்பாயத்தின் அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. "ஸ்டெர்லைட் ஆலையின் நான்கு நுழைவாயில்களிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் உள்நுழைய முடியாது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் உள்ளே அனுமதிக்கப்படுவதன் மூலம் பெரும் பிரச்னை உருவாக வாய்ப்புள்ளது" என தமிழக அரசு அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அதனை உச்ச நீதிமன்றம் ஏற்று, வருகிற 17ம் தேதி விசாரணைக்குஎடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP