சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

சூலூர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 | 

சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

சூலூர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு அரசியல் தலைவர்களும், சுயேட்சைகளும் தொடர்ந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சூலூர் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவை சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு, ஆதிபேரவை நிறுவனர் அதியமான், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பிரிமியர் செல்வம், சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன், தி.மு.க. பிரமுகர் மன்னன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த போது, 5 பேர் உடன் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றேன். தி.மு.க. சூலூர் தொகுதியில் கட்டாயம் வெற்றி பெறும்," என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP