‘சுஜித் மீட்புப்பணிக்கு ரூ.5 லட்சம் மட்டுமே செலவானது’

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க ரூ.5 லட்சம் தான் செலவானது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

 ‘சுஜித் மீட்புப்பணிக்கு ரூ.5 லட்சம் மட்டுமே செலவானது’

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க ரூ.5 லட்சம் தான் செலவானது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் கூறுகையில், ‘சுஜித் மீட்புப்பணிக்காக ரூ.10 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை. மீட்புப்பணிக்காக ரூ.5 லட்சம் 5,000 லிட்டர் டீசல் மட்டுமே செலவானது. மீட்புப் பணிக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.

மேலும், எல்&டி, ஓஎன்ஜிசி, என்எல்சி நிறுவனங்கள் தங்கள் செலவுத் தொகையை கோரவில்லை என்றும் ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP