மகனை மீட்க அரசு நல்ல முயற்சி எடுத்தது: சுஜித் தந்தை,  சுஜித் விழுந்த இடத்தில் கோயில் கட்ட ஆசை: சுஜித் தாய் 

தனது மகனை மீட்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக சுஜித்தின் தந்தை தெரிவித்துள்ளார்.
 | 

நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுஜித் தந்தை ஆரோக்கியதாஸ், ‘என் மகனை மீட்க நல்ல முயற்சியையும், அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்தது. சுஜித் உயிருடன் மீண்டுவர பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

சுஜித்தின் தாய் கலாமேரி அளித்த பேட்டியில், ஆழ்துளைக் கிணறு உயிரிழப்பு சம்பவம் இனியும் தொடரக்கூடாது; இதுவே இறுதியாக இருக்க வேண்டும். என் மகன் சுஜித் விழுந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்பதே என் ஆசை’ என்று அவர் கூறியுள்ளார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP