சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்;அரசியலாக்க விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்

குழந்தை சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்;அரசியலாக்க விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்

குழந்தை சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், ‘அனைவரையும் போல் சிறுவன் சுஜித் மீட்கப்பட வேண்டும் என நானும் காத்திருக்கிறேன். சுஜித்தை மீட்பதற்கான எல்லா முயற்சிகளும் நடைபெற்று வருவதை பார்க்கிறேன். மீட்பு பணிகள் குறித்து பேசி, அரசியலாக்க விரும்பவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘குழந்தை சுஜித்தின் நிலைகண்டு என் நெஞ்சு பதைபதைக்கிறது. அமைச்சர்கள், ஆட்சியர், வருவாய்த்துறை செயலர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை கவனித்து வருகின்றனர். ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு கட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியதாக விஜயபாஸ்கர் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP