ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றவர் மகிழ்ச்சியில் இருந்த தருணத்தில் திடீர் மரணம்.. திமுகவினர் சோகம்

ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றவர் மகிழ்ச்சியில் இருந்த தருணத்தில் திடீர் மரணம்..
 | 

ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றவர் மகிழ்ச்சியில் இருந்த தருணத்தில் திடீர் மரணம்.. திமுகவினர் சோகம்

பெரம்பலூர் அருகே ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் மணிவேல்(72) என்பவர் போட்டியிட்டார். இதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுப்ரமணியை விட 160 வாக்குகள் வித்தியாசத்தில் மணிவேல் வெற்றி பெற்றார். இதனை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றவர் மகிழ்ச்சியில் இருந்த தருணத்தில் திடீர் மரணம்.. திமுகவினர் சோகம்

பின்னர் நேற்று மாலை தனது வெற்றிக்கான சான்றிதழை அவர் பெற்றுச் சென்ற நிலையில், திடீரென இரவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை மணிவேல் உயிரிழந்தார். இவர், அண்ணா ஆட்சி காலத்தின்போது பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்த வெங்கலம் மணி என்பவரது சகோதரர் ஆவார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP