சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
 | 

சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி பேனர் விழுந்து லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தனது வீட்டு திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனரால் இந்த விபத்து நேரிட்டது. இதுதொடர்பான வழக்கில், பேனர் வைத்தவரின் பெயரை வழக்கில் ஏன் சேர்க்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், ஜெயகோபாலின் பெயர் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டது. அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தற்போது, ஜெயகோபால்  நெஞ்சுவலி காரணமாக பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP