Logo

வேளாண் படிப்புகளில் ஆர்வம் காட்டும் மாணவிகள்!

வேளாண் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு துவங்கிய இரண்டு நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
 | 

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 27 இணைப்பு கல்லூரிகளில் பத்து பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு கடந்த 8ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 7 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்ப பதிவுகள் தொடங்கி இரண்டு நாட்களே முழுமை பெற்று உள்ள நிலையில் நேற்று மாலை நிலவரப்படி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். இதில் 60 சதவீதம் பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  வரும் வாரங்களில் மேலும் அதிக விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்ப்பதாகவும், வேளாண் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளதை இது காட்டுவதாகவும்  பல்கலைக் கழகம் தெரிவித்து உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP