மாணவன் சுட்டுக்கொலை: தலைமறைவான நண்பர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை அருகே கல்லூரி மாணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
 | 

மாணவன் சுட்டுக்கொலை: தலைமறைவான நண்பர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை அருகே கல்லூரி மாணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

சென்னை தாம்பரம் அருகே வேங்கடமங்கலத்தில் தனியார் பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் நேற்று அவரது நண்பர் விஜய் வீட்டிற்கு சென்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். படுகாயமடைந்த மாணவர் உடனடியாக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் உயிரிழந்தார். விஜய் தலைமறைவான நிலையில், அவரது சகோதரர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், முகேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் விஜய் இன்று கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். துப்பாக்கிசூடு எப்படி நடந்தது? துப்பாக்கி எப்படி கிடைத்தது? என்ற விவரங்கள் வெளியாகாதா நிலையில் விஜய் சரணடைந்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP