மாணவி பாத்திமா தற்கொலை: ஐஐடி பேராசிரியர்களுக்கு சம்மன் 

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் 3 பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
 | 

மாணவி பாத்திமா தற்கொலை: ஐஐடி பேராசிரியர்களுக்கு சம்மன் 

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் 3 பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவி பாத்திமா கடந்த 9ஆம் தேதி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். இவரது தற்கொலையில் மர்மம் உள்ளதாகவும், இவரது மரணத்திற்கு பேராசிரியர் தான் காரணம் எனவும் பாத்தமாவின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஆதாரங்களை தமிழக காவல்துறை இயக்குனரிடம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவி மரணம் தொடர்பாக 3 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் மூன்று பேராசிரியர்களும் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு உத்தரவிட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP