துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மாணவர் உயிரிழப்பு 

சென்னை தாம்பரம் அருகே வேங்கடமங்கலத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் தலையில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்த தனியார் பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் உயிரிழந்தார்.
 | 

குரோம்பேட்டை மருத்துவமனையிலிருந்து மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தனது நண்பர் விஜய் வீட்டிற்கு சென்றபோது மாணவர் முகேஷ் சுடப்பட்டார். விஜய் தலைமறைவான நிலையில் அவரது 2 சகோதரர்களை பிடித்து தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், முகேஷின் நண்பர் வீட்டின் அருகே சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP