திருச்சியில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக, தோழமை கட்சிகளுடன் போராட்டம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திருச்சியில் இன்று மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது. இதில் தோழமை கட்சிகள் பங்கேற்கின்றனர்.
 | 

திருச்சியில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக, தோழமை கட்சிகளுடன் போராட்டம்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திருச்சியில் இன்று மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது. 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, ஆரம்பகட்ட ஆய்வு நடத்த மத்திய நீர்வளத்துறை அனுமதியளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சியில் இன்று மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது. 

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP