விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி: ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி வெற்றி பெற்றால், விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் இது திமுக தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி: ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இன்று திருப்பூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியது விவசாயிகள் மத்தியில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தொடர்ந்து, விவசாயத்திற்காக வாங்கிய நகைக்கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கை வந்தது. அதன்படி, திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், விவசாயிகள், வங்கிகளில் 5 பவுன்கள் வரையில் நகைக்கடன் பெற்றிருந்தால், அவை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். இந்த அறிவிப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இணைக்கப்படும்" என்று தெரிவித்தார். 

திமுகவின் இந்த அறிவிப்பும் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP