Logo

கொடநாடு வழக்கில் ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

கொடநாடு விவகாரம் குறித்து தேர்தல் பிரச்சாரங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்தது பேசினால், அவதூறு வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்றும் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தெகல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது போன்று ஆவணப்படத்தில் கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கொடநாடு விவகாரத்தை முன்வைத்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். 

தொடர்ந்து, கொடநாடு விவகாரம் தொடர்பான அவதூறு வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதல்வரை தொடர்பு படுத்தி பேசினால் அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்றும் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்றும்ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், தேர்தல் பிரச்சாரங்களில் இதுகுறித்து ஸ்டாலின் பேசிய வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP