கருணாநிதியின் இடத்தை பிடித்த ஸ்டாலின்!

பரபரப்பான சூழ்நிலையில் இன்று தொடங்கி இருக்கும் தி.மு.க செயற்குழு கூட்டத்தில் பேனர்களில் கருணாநிதி படத்திற்கு முன் ஸ்டாலினின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
 | 

கருணாநிதியின் இடத்தை பிடித்த ஸ்டாலின்!

பரபரப்பான சூழ்நிலையில் இன்று தொடங்கி இருக்கும் தி.மு.க செயற்குழு கூட்டத்தில் பேனர்களில் கருணாநிதி படத்திற்கு முன் ஸ்டாலினின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி மறைந்த பிறகு அக்கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் பல மாவட்டங்களில் இருந்து தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பேனர்களில், நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பேட்ஜ்களில் ஸ்டாலினின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தி.மு.க கூட்டத்தில் அமைக்கப்படும் பேனர்களில் பெரியார், அண்ணா புகைப்படங்களுக்கு முன் கருணாநிதியின் புகைப்படம் இருக்கும். 

கருணாநிதியின் இடத்தை பிடித்த ஸ்டாலின்!

இந்நிலையில் அவர் மறைவுக்கு பிறகு ஸ்டாலினின் படம் இணைக்கப்பட்டுள்ளது. முக.ஸ்டாலினை எதிர்த்து மு.க.அழகிரி நேற்று கருத்து கூறியது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஸ்டாலினின் புகைபடம் இணைக்கப்பட்டு உள்ளது, அவர் தான் அடுத்த தலைவர் என்பதை காட்டுவது போல இருப்பதாக பலர் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP