கருணாநிதிக்கு கடிதம் எழுதிய சிறுமியை சந்தித்த ஸ்டாலின்

சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமியை, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பேசினார்.
 | 

கருணாநிதிக்கு கடிதம் எழுதிய சிறுமியை சந்தித்த ஸ்டாலின்

சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமியை, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பேசினார். 

சென்னை காவேரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி. தினம் தினம் பல்வேறு  அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவரது உடல்நிலை குறித்து நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த மிக்கலே மிராக்ளின் என்ற 8 வயது சிறுமி கருணாநிதியிடம் நலம் விசாரித்து கடிதம் ஒன்றை எழுதினார். அவர் எழுதிய கடிதத்தில், எனக்கு கருணாநிதி தாத்தாவை மிகவும் பிடிக்கும். உங்களுக்கு உடம்பு சரியில்லை என கேள்விப்பட்டவுடன் நான் அழுதேன். உங்களுக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். நீ கடவுளிடம் பிரார்த்தனை செய்ததால் கருணாநிதிக்கு உடல்நலம் சரியாகிவிட்டது என என் அம்மா கூறினார். இதைகேட்ட நான் மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். 

இந்த கடிதம் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து அந்த சிறுமியை மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பேசி உள்ளார். அந்த சிறுமியிடம், கருணாநிதிக்கு உடல்நலம் சரியில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று ஸ்டாலின் கேட்டதற்கு, "நான் நியூஸை பார்த்து தெரிந்து கொண்டேன்" என்கிறார். மேலும், என்னை யார் என்று தெரிகிறதா என்று ஸ்டாலின் கேட்க... தெரியும் உங்களையும் டிவில பார்த்திருக்கேன் என்கிறார். 

பின்னர், "இதுகுறித்து தலைவர் வீட்டுக்கு வந்ததும் சொல்கிறோம். அப்போது நேரில் வந்து பாருங்கள்" என்று மு.க.ஸ்டாலின் கூறி அனுப்பினார். இந்த சந்திப்பின் போது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP