தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை: ஸ்டாலின்

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே எங்களது நிலைப்பாடு என்று திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை: ஸ்டாலின்

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே எங்களது நிலைப்பாடு என்று திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி என மத்திய அரசு வெறுப்பு அரசியலை வளர்க்கிறது. 

 

 

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். இதற்காக 60 கோடி ரூபாய் செலவாகும் என்று தட்டிக் கழிக்கக்கூடாது. 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதை நாம் கண்டிக்க வேண்டும். 

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே எங்களது நிலைப்பாடு. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த அரசின் கடிதம் என்னவாயிற்று? ஆளுநர் என்ன முடிவு எடுக்க இருக்கிறார்? 

வேளச்சேரி- புனித தோமையார் மலை இடையே ரயில் சேவை எப்போது தொடங்கும்?" உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP