இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: அதிமுக கண்டனம்

இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
 | 

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: அதிமுக கண்டனம்

இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தேவாலயங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தாக்குதலில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் நித்திய இளைப்பாறுதலை வழங்க பிரார்த்திக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை இறைவன் அருள வேண்டி நிற்கிறோம். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP