‘அரசு பள்ளிகளில்  ‘Spoken English’ பயிற்சி’

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசு பள்ளிகளில் ‘Spoken English’ பயிற்சிக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

 ‘அரசு பள்ளிகளில்  ‘Spoken English’ பயிற்சி’

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசு பள்ளிகளில் ‘Spoken English’ பயிற்சிக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில பேச்சு திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

‘1 முதல் 5ஆம் வகுப்புக்கு  2ஆம் பருவத்திற்கு ஒரு கையேடு வழங்கப்படும். 6 முதல் 9ஆம் வகுப்புக்கு 3 பருவங்களுக்கும் சேர்த்து 4 கையேடுகள் வகுப்பு வாரியாக வழங்கப்படும். பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் வாயிலாக கையேடுகள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்படும். 1 முதல் 5ஆம் வகுப்பு வரை வாரத்திற்கு 90 நிமிடங்கள் என கால அட்டவணை தயாரிக்க வேண்டும். 6-9ஆம் வகுப்பிற்கு வாரத்திற்கு 45 நிமிடம் என ஆங்கில பேச்சுதிறன் பயிற்சி அட்டவணை தயாரிக்க வேண்டும். தொடக்கநிலை கையேட்டில் மாணவர்கள் செயல்பாட்டு அறிக்கையை ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். ஆங்கில பேச்சுதிறன் பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்’ என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP