ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு!

இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுடன் கூடிய வழிபாடு நடைபெற்று வருகிறது.
 | 

ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு!

இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுடன் கூடிய வழிபாடு  நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை என முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொள்கின்றனர். மேலும், முருகப்பெருமானுக்கு பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பது என தங்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர். அறுபடை வீடுகளில் முக்கியமாக திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

முன்னதாக, ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP