நாட்டுக்கோட்டை செட்டியார்கள் குறித்த சிறப்பு ஆய்வு - ஆச்சரியம் அளிக்கும் ஆராய்ச்சி முடிவு!! 

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் மரபணுவியல் குறித்த ஆராய்ச்சியில், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் தோற்றம் சுமார் 65,900 ஆம் ஆண்டுகளுக்கும் முன்பு தோன்றியது என்ற ஆச்சரியம் அளிக்கும் விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 | 

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் குறித்த சிறப்பு ஆய்வு - ஆச்சரியம் அளிக்கும் ஆராய்ச்சி முடிவு!! 

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் மரபணுவியல் குறித்த ஆராய்ச்சியில்,  நாட்டுக்கோட்டை செட்டியார்களின்தோற்றம் சுமார் 65,900 ஆம் ஆண்டுகளுக்கும் முன்பே தோன்றியது என்ற ஆச்சரியம் அளிக்கும் விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கோட்டை செட்டியார் என்று அழைக்கப்படும் வணிக சமூகத்தைச் சேர்ந்த மக்கள், புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். வியாபார நிமித்தமாக பல நாடுகளுக்கு செல்லும் இவர்களின் மூலம் இந்து சமயமும் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.

இன்றும் இவர்களின் வம்சாவழியினர் இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் வசித்து வருவதாகவும், சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே இவர்களது பூர்விகமாக கருதப்பட்டும் வந்த நிலையில், இவர்கள் சுமார் 65,900 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாக தற்போதைய மரபணுவியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கோட்டை செட்டியார்களின்பூர்வீகத்தை அறிவதற்காக, மதுரை காமராஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த மரபணு ஆராய்ச்சியாளர் ஆர்.எம். பச்சையப்பன் தலைமையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் மரபணுவியல் ஆராய்ச்சியில், அவர்களின் தோற்றம் சுமார் 65,900 ஆம் ஆண்டுகளுக்கும் முன்பே தோன்றியது என்ற ஆச்சரியம் அளிக்கும் விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரது ஆராய்ச்சியில் கிடைத்த தகவலின்படி, "வணிக சமூகத்தை சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததாகவும், அப்படி ஓரோர் இடமாக செல்லும் இவர்களின் வாரிசுகள் ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் ஒருவராகக் கருதப்படும் அரும்பாக்கூர் வாரிசுகள், பிரான்மலையை சேர்ந்த அருவியூர் நகரத்தார் என்ற சமூகத்தினருடன் இணைந்து தற்போதும் ஓர் சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். 

நாம் நினைத்துக்கொண்டிருப்பதை போல எந்த ஒரு இனமும் ஒரு சமூகத்தினர்  மட்டும் நிறைந்ததாக இருப்பதில்லை. பல வகையான சமூகத்தினருடன் ஒன்றுபட்டு தான் இருந்து வருகிறது. அருவியூர் நாகரத்தார் சமூகத்தினருக்கும் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் மரபணு இருக்கலாம் என்னும் நிலையில், அது குறித்து ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். 

சாதி, மதம், வாரிசு போன்றவை பொதுவாக தந்தை வழி சமூகத்தில் தான் அதிமாக காணப்படுகின்றன. பிராமணர்களின் குலம், கோத்திரம் போன்றவையும் இது போன்ற ஒன்றுடன் தொடர்புடையவைதான். ஒரே கோத்திரத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ய கூடாது போன்றவை இந்துக்களது முறையில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், எவ்வாறு இவர்களது குலம் மற்றும் கோத்திரங்கள் முடிவு செய்யப்படுகிறது என்ற கேள்விக்கான விடையை முதலில் ஆராய வேண்டும். இந்த ஆராய்ச்சியின் மூலம், செட்டியார்கள், வெள்ளாள பெண்களை திருமணம் செய்துக்கொள்வது தொன்று தொட்டே இருந்து வருகின்ற பழக்கம் என்பதால், நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மத்தியில் இனக்கலப்பு ஆதி காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்பது நிரூபணமாகியுள்ளது". 

இந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள், சங்க காலம் (100கிபி-300கிபி), பாண்டிய காலம் (1000கிபி-1200கிபி), விஜயநகர காலம் (1300கிபி-1500கிபி) மற்றும் ஆங்கிலேயர் காலம் (1600கிபி-1800கிபி) ஆகிய நான்கு பெரும் காலங்களிலும் வாழ்ந்து வந்ததாக இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

Newstm.in

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP