வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடு!

வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதை நிறுத்தியவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் பெற்றவர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 | 

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடு!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடு!வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதை நிறுத்தியவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் பெற்றவர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் தாக்கல் செய்வதை நிறுத்தியவர்கள் பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில், 2016-17, 2017-18ம் ஆண்டுகளில் வருமான வரி செலுத்திவிட்டு, அது தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்யாதவர்களுக்கு, நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதங்களைப் பெற்றவர்கள் விளக்கம் கேட்டும், வழிகாட்டு உதவி வழிமுறைகளைத் தெரிவிக்கும் படியும் கோரிக்கை விடுத்தனர். 

அதன் அடிப்படையில், வரி செலுத்தியோர் குறிப்பாக, சுயவேலைவாய்ப்பு அல்லது ஊதியம், ஓய்வூதியம் மூலம் வருமானம் பெறுவோர், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதை தூண்டும் வகையிலும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இவர்கள், சென்னையில் ஆயகார் பவன், 121, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 034

பிஎஸ்என்எல் கட்டிடம், எண்.16, கிரீம்ஸ் சாலை, சென்னை-600 006

130பி, முடிச்சூர் சாலை, மேற்கு தாம்பரம், சென்னை – 600 045

ஆகிய இடங்களில் செயல்படும் ஆயகார் சேவை மையங்களில் வருகிற திங்கட்கிழமை (26-ம் தேதி) முதல் மார்ச் 31-ம் தேதி வரை காலை  மணி 9.15 முதல், மாலை மணி 5.45 வரை தங்கள் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யலாம்.

கூடுதல் விவரங்கள் மற்றும் விளக்கங்களுக்கு 044-28338014 / 28338314 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP