விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்!

விடுமுறையில் ஊர் திரும்பிய கன்னியாகுமரியை சேர்ந்த ராணுவ வீரர்கள், விடுமுறை காலத்தில் ஓய்வெடுக்காமல், தங்கள் பகுதியை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது, அப்பகுதி மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்!

விடுமுறையில் ஊர் திரும்பிய கன்னியாகுமரியை சேர்ந்த ராணுவ வீரர்கள், விடுமுறை காலத்தில் ஓய்வெடுக்காமல், தங்கள் பகுதியை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீரர்களின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

எல்லையில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பம், உறவுகள், நண்பர்கள் என அனைத்தையும் விடுத்து, கடமை ஒன்றே பெரிது என்ற வகையில் சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் விடுமுறையில், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி, சொந்த பந்தங்களுடன் பொழுதை கழிப்பதோடு, ஓய்வும் எடுப்பது வழக்கம். 

விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்!

இவ்வாறு விடுமுறையில் ஊர் திரும்பியுள்ள கன்னியாகுமரியை சேர்ந்த ராணுவ வீரர்கள், 'கன்னியாகுமரி ஜவான்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கி ஒருங்கிணைந்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளை சுத்தம் செய்து வருகின்றனர்.  பொதுமக்கள் உபயோகிக்கக்கூடிய இடங்கள் பழுதடைந்திருந்தால் அவற்றை சீர் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். 

விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்!

இதுகுறித்து, ராணுவ வீரர் ஒருவர் பேசும் போது, "சொந்த ஊரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கன்னியாகுமரியில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு இடங்களை தூய்மைப்படுத்தி வருகிறோம். இதன்மூலம் எங்களுக்கு ஒரு மனதிருப்தி கிடைக்கிறது. நாங்கள் பிறந்த, இந்த ஊருக்காக சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம் மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வும் உருவாகும். எங்களை பின்தொடர்ந்து இளைஞர்களும் எங்களுக்கு உதவுகின்றனர்" என்று தெரிவித்தார். 

ராணுவ வீரர்களின் இந்த சேவை, அந்த மாவட்ட மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் நாட்டு மக்களுக்காக சேவையாற்றுவது மட்டுமின்றி, விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். 

விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்!

மக்கள் பாராட்டுவதோடு நிற்காமல், வீரர்கள் தூய்மை செய்யும் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொண்டால் அதுவே அவர்களுக்கு செய்யும் மரியாதை என ஊர் மக்கள் பலரும் கருது தெரிவித்துள்ளனர்.

வீரர்களின் இந்த சேவைக்கு  Newstm சார்பில் 'ராயல் சல்யூட்'.. நீங்களும் பாராட்டலாமே...

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP