புதிய  உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு 

தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 | 

புதிய  உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு 

தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி ஓய்வு பெற்றதை அடுத்து, நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளராக உள்ளா எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கே.பிரபாகர், 1989 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபாகர், பல்வேறு துறைகளின் செயலராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 7 மாவட்ட வருவாய் அலுவலர்களையும் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP