காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில், அப்பகுதி மக்கள் குளிக்கச் செல்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறையையொட்டி, 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் குளிக்கச் சென்றுள்ளனர். 

தொடர்ந்து, குளிக்கச் சென்றவர்கள் கரைக்கு திரும்பயில்லை என்பதை அறிந்த அங்குள்ளவர்கள், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். முதலில் 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. எஞ்சிய மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில் அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. 

இதில், அப்பகுதியைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அப்பகுதி வந்த கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இருவரும், 'விபத்து நிகழ்ந்த பகுதி தங்களது எல்லைக்கு உட்பட்டது அல்ல' என்று கூறி உயிரிழப்புக்கு இருவருமே பொறுப்பேற்க மறுத்து திரும்பி சென்றுவிட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் காவிரி ஆற்றின் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

ஆற்றில் பள்ளமான பகுதி என்று தெரியாமல் சென்று நீர்ச் சூழலில் சிக்கி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP