சிலை கடத்தல் விவகாரத்தில் கைதான சிவக்குமார் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னையில், தொன்மை வாய்ந்த பஞ்சலோக முருகன் சிலை கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிவக்குமார் இன்று கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
 | 

சிலை கடத்தல் விவகாரத்தில் கைதான சிவக்குமார் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னையில், தொன்மை வாய்ந்த பஞ்சலோக முருகன் சிலை கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிவக்குமார் இன்று கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு லேத் பட்டறையில் தொன்மை வாய்ந்த பஞ்சலோக முருகன் சிலையை விற்க முயற்சி நடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையில், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட காவல்துறையினர் நேற்று லேத் பட்டறையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ 50 கிராம் எடை கொண்ட பஞ்சலோக முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து லேத் பட்டறை உரிமையாளர் சிவகுமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நெமிலியை சேர்ந்த தேசனடிகள், கன்னியாகுமரியை சேர்ந்த முகேஷ், சென்னை கிருகம்பாக்கத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஆகிய மூவரும் இணைந்து, அந்த சிலையை ரூ.1 கோடிக்கு விற்க பேரம் பேசியிருந்தது தெரியவந்தது.

மேலும், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணத்தையடுத்த நெமிலியில் உள்ள இந்தக்கோவில் ஒன்றில் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இன்று கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி  ஜன.4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP