சென்னையில் பல இடங்களில் மழை!

சென்னையின் பல இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 | 

சென்னையில் பல இடங்களில் மழை!

சென்னையின் பல இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் லேசான மழை பெய்துவருகிறது. 

சென்னையில் கடந்த 6 மாத காலமாக மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பொழிந்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து இன்று, கிண்டி, கோயம்பேடு, அண்ணாநகர்  உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. 

வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த ஐந்து தினங்களுக்கு சென்னையில்  லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP