சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கடலூர், நாகை, திருவாரூர், காரைக்கால் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7செ.மீ மழையும், வேலூர் மாவட்டம் களவையில் 5செ.மீ. மழையும், சிவகங்கை, உளுந்தூர்பேட்டை, செங்கம் உள்ளிட்ட இடங்களில் 3செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

தென் மேற்கு பருவமழை தற்போது வழுவடைந்து வருவதாலும், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும் வட தமிழக மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP